2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புத்தக, ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு மட்டக்களப்;பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை கிராமத்தின் வாசகர் வட்டத்தின் எற்பாட்டில் எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் களுதாவளை பொதுநூலகத்தில் நடைபெறவுள்ளதாக களுதாவளை வசகர் வட்டத்தின் தலைவர் இ.ஞானசேகரன் தெரிவித்தார்.

மேற்படி இரண்டு நாட்களும் தினமும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இக்கண்காட்;சி நடைபெறவுள்ளது.

வசகர் வட்டத்தின் தலைவர் இ.ஞானசேகரன்; தலைமையில் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.ந.சத்தியானந்தி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (சட்டத்தரணி) கி.துரைராசசிங்கம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமார், களுதாவளை பொது நூலகத்தின் நூலகர் பி.எம்.முகமட்.ஜௌபர், வீடமைப்பு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ப.குணசேகரம், உட்பட வாசகர் வட்டத்தினர், பொதுமக்கள், பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கண்காட்சியில் பழமைவாய்ந்த நூல்கள்;, புதிய வெளியீடுகள், பிரதேச சித்திர படைப்பாளிகளினால் வரையப்பட்ட ஒவியங்கள் என்பன காட்சிப்படுத்தப் படவுள்ளதாக வசகர் வட்டத்தின் தலைவர் இ.ஞானசேகரன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .