2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பாரம்பரிய கலாசார விழா'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.கே.றஹ்மத்துல்லா


மாகாண இலக்கிய விழாவை முன்னிட்டு 'பாரம்பரிய கலாசார விழா' அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அக்கரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து இதனை நடத்தி வருகின்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் சாதனை படைத்த கலைஞர்களின் கலை, கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், அவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .