2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மனிதம்' குறுந்திரைப்படம் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, தேவ அச்சுதன்

மட்டக்களப்பில், 'மனிதம்' குறுந்திரைப்படம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு, கிறீன் கார்டன் விடுதியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் இளம் தயாரிப்பாளர் ஜே.எல்.ஜரோசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை, மற்றும் முக்கியஸ்த்தர்கள், கலை இலக்கிய வாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்குருந்திரைப்படத்தில்,   இளம் கலைஞர்களான கே.சிவகன், ஆர்.கே.கேனுஜன், ஜே.ஏ.சதீஸ்கோசன், ராஜேந்திரம் பிரதிஸ்கான், கே.சரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .