2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒகஸ்ரா இசை நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் ஜப்பானியத் தூதரகமும் இணைந்து நடத்திய ஒகஸ்ரா இசை நிகழ்வு தீபாவளி தினமான நேற்று சனிக்கிழமை  விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.

நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்;த இசை நிகழ்வில், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேமகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்வின் இறுதியில் ஜப்பானின் ஒகஸ்ரா இசைக் கலைஞரான கேய்கோ கொபயாசி கௌரவிக்கப்பட்டார்.

இந்த இசை நிகழ்ச்சியில் கொழும்பு வின்ட் ஒகஸ்டா இசைக் குழுவினர் பல்வேறு இசைப் பாடல்களை இசைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .