2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பௌர்ணமி விழா

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் நேற்று (17.11.2013) மாலை பௌர்ணமி விழா நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பிரதி மாதமும் பௌர்ணமியன்று நடத்தி வருகின்ற இந்த பௌர்னமி கலை விழாவின் இரண்டாவது மாத பௌர்னமி விழாவே நேற்று நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பிரதே செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் கே.தவராஜர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன், காத்தான்குடி உதவி பிரதேச செயலளார் ஏ.சி.அகமட் அப்கர், மட்டக்களப்பு கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச் செல்வன் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல் உட்பட முக்கியஸ்த்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பௌர்ணமி கலைவிழாவில் காத்தான்குடியிலுள்ள கலைஞர்களின் இஸ்லாமிய றபான், மற்றும் கலிக்கம்பு, நாடகம் என்பன நடைபெற்றன.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த பௌர்னமி கலைவிழாவில் மட்டக்களப்பு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .