2025 நவம்பர் 22, சனிக்கிழமை

பெண்கள், சிறுவர் உரிமைகள் மற்றும் மீறலுக்கான தண்டனைகள் நூல் வெளியீடு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையில் பெண்கள், சிறுவர் உரிமைகள் மற்றும் மீறலுக்கான தண்டனைகள் எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனீதா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.கரன், உலக தரிசன நிறுவனத்தின் நாவிதன்வெளி பிரதேச திட்ட இணைப்பாளர் ரி.அஸாம், நிர்வாக உத்தியோகத்தர் ரி.கமலநாதன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நூல் வெளியீட்டு உரையை சமூக அபிவிருத்தி பிரிவு தலைமை முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.ஹசன் நிகழ்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X