Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுசரணையில் 45ஆவது இலக்கிய சந்திப்பு, பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இலக்கிய சந்திப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இன்றைய இலக்கிய சந்திப்பு நிகழ்வில் மலையகம் – வரலாறும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் இலங்கையின் இந்தியத் தமிழர்களும் தமிழ்நாட்டின் சிலோன்காரர்களும் மலையக இலக்கியத்தின் தோற்றுவாயாக நாட்டாரியல், மலையக புனைவு இலக்கியம், மலையக ஆய்வு இலக்கியமும் திறனாய்வும் மற்றும் இலங்கை அரச நிர்வாகத்தில் மலையகம் சந்திக்கும் சவால்கள் என்ற 05 தலைப்பிலான ஆய்வுகளும் கட்டுரைகளும் இடம்பெற்றன.
இலக்கியவாதிகளான மல்லியப்பு சந்திதிலகர், மு.சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், லெனின் மதிவானம், இரா.ரமேஸ் மற்றும் பேராசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
42 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
4 hours ago