Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தடாகம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த எஸ்.ஜனூஸின் "தாக்கத்தி" கவிதை தொகுதி வெளியீட்டு விழாவும் சிறப்பு கவியரங்கும் இன்று திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் என பலர் கலந்துகொண்டனர்.
"தாக்கத்தி" கவிதை தொகுதியின் முதற் பிரதியினை அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி பெற்றுக்கொண்டார்.
கலைமகள் ஹிதாயா றிஸ்வி வரவேற்புரையினையும் ஜெஸ்மி எம். முஸா நூல் மற்றும் நூலாசிரியரும் பற்றியும் எம்.நவாஸ் சௌபி தாக்கத்தி மீதான கூர் தீட்டலையும் றிஸ்வி யு,. முஹம்மட் நபீல் சாணை பிடித்தல் எனும் தலைப்புக்களில் இதன்போது உரையாற்றினர்.
அத்துடன் ஓய்வுபெற்ற முன்னாள் கோட்ட கல்வி பணிப்பாளர் அலியார் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் சிறப்பு கவியரங்கும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
இதில் கவிஞர்களான ஏ.எம்.தாஜ், எஸ்.றபீக், கிண்ணியா அமீர் அலி, பொத்துவில் அஸ்மின், மருதமுனை விஜிலி, சுபைதா ஏ கரீம், தம்பிலெவ்வை இஸ்மாயில் மற்றும் லோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நிரோசிகா ஜோன் குமார குலசிங்கம் மற்றும் நிலுக்சிகா ஜோன் குமார குலசிங்கம் ஆகிய சகோதரிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.
maligaikadu sirajdeen siro Monday, 12 March 2012 05:37 PM
வாழ்த்துக்கள் ஜனூஸ். என்றும் உங்கள் கலை பயணம் தொடர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
31 minute ago