Freelancer / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ் டீன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், பொது மக்கள் தங்களது வீட்டுச் சூழல் மற்றும் ஏனைய வெற்றுக் காணிகளை துப்புரவு செய்வதன் மூலமே டெங்கு நுளம்புகளின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில், நாளை சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்புப் படையினர், பொது அமைப்புகள், இளைஞர் கழகங்கள், பொது மக்கள் இணைந்து, வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், துப்புரவு பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
பாவிக்காத கிணறுகளை மூடுதல், அவற்றுக்குள் மீன் குஞ்சுகளை விடல், நுளம்புகள் பெருகும் இடங்களில் மருந்துகளை தெளித்தல், புகை விசிறல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாமல் செய்தல் என்பனவும் இடம்பெறவுள்ளன.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago