R.Tharaniya / 2025 ஜூன் 03 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீது அடக்கு முறையை கண்டித்து திங்கட்கிழமை (02) அன்று மாலை திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் கோயில் நிலங்களை அபகரிக்காதே,பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே, அரசே சைவ மத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்து கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல்.
ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்து மீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது.ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறிப் பெரும் பிரச்சாரம் செய்து வந்த ஜேவிபி அரசு முந்தைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகின்றது.
குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோத செயலாகும்.அத்துடன் நீண்ட நாளாக தொடரும் சமய வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனைகளுக்கும் எந்த தீர்வையும் தராது அடாவடியினைச் செய்து வருகின்றது.
கன்னியா சிவாலய வழிபாட்டு முடக்கம்,திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு,வெடுக்கு நாறி மலையில் வழிபாட்டுக்கு தடை,குறுந்தூர் மலையில் தடையினை மீறி புத்த விகாரை தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பட்டியல் நீள்கிறது.
தொடர்ச்சியாக நடைபெறும் இந்த செயற்பாட்டை கண்டித்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




ஏ.எச் ஹஸ்பர்
அ . அச்சுதன்
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago