Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு வீடுகளை உடைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் கொள்ளையடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மற்றும் நதியா கடற்கரை பிரதேசம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை (08) இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.
மீன் பிடி இலாகா வீதியிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து 4 பவுண் தங்க நகை 5 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றையும் நதியா கடற்கரை பகுதியிலுள்ள தோட்டமொன்றிலுள்ள வீட்டுக் கூரையை உடைத்து உள்ளே இறங்கி மின்விசிறி மெராக்கள், தண்ணீர் ஹீற்றர், வானொலிப் பெட்டி உட்பட பல பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்
.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரைத் தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மின்விசிறி மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
4 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
2 hours ago