2025 ஜூன் 25, புதன்கிழமை

இலவச சித்த மருத்துவ முகாம்

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபு அலா 
 
உலக சித்தர் தினத்தையொட்டி திருகோணமலை கோணேசபுரி சித்த போதனா வைத்தியசாலையும், திருமலை வளாக சித்த மருத்துவத்துறையும் இணைந்து மூதூர், கங்குவேலி  அகஸ்தியர் கோவிலில் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம், சிறப்பு யாகம், அன்னதானம் ஆகிய நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக சித்த போதனா வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி வைத்தியர் திருமதி சியாமளா வர்ணகுலேந்திரன் தெரிவித்தார். 
 
அகஸ்திய மாமுனிவர் பிறந்த நாளான இன்று (09), சித்தர் தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் சித்த மருத்துவத்தின் தந்தையாக மதிக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .