Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வீதியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் பணம், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) இடம்பெற்றது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரச வங்கி க்கு திங்கட்கிழமை (20) ரூபாய் 35 இலட்சம் பணத்தை, வியாபார நடவடிக்கைக்காக வைப்பிலிடுவதற்கு வர்த்தகர் ஒருவர் சென்றிருக்கின்றார். வங்கிக்குள் சென்று குறித்த தொகையை வைப்பிலிடுவதற்கு தயாரான நிலையில், கொண்டு வந்திருந்த பணத்தொகையில் ரூபாய் ஐந்து இலட்சம் காணாமல்போயுள்ளதை அறிந்துள்ளார்.
இந்நிலையில், உரிய வங்கி மேலாளருக்கு அறிவித்து விட்டு, வங்கியின் அருகில் இருந்த சி.சி.டி.வி கமெரா காணொளிகளை அவதானித்தபோது, தவறவிடப்பட்ட பணத்தை ஒருவர் எடுத்து செல்வது அவதானிக்கப்பட்டது.
அதற்கமைய, நேற்று (21) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்குவதற்காக சென்றபோது, பணத்தைக் கண்டெடுத்த கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞனும், பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு வருகை தந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
மேலும், ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தைத் தொலைத்தவரும் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல் புத்திகவின் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் , கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ வாஹிட் முன்னிலையில் காணாமல் போன பணம், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில், இளைஞர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், மனிதாபிமானமும் தன்னம்பிக்கையும் உள்ள இவ்வாறான இளைஞர்களை நினைத்து பெருமை கொள்வதாக பொலிஸாரும் வர்த்தகரும் பாராட்டினர்.

7 minute ago
11 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
2 hours ago
3 hours ago