2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட இருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிண்ணியா விவசாய சம்மேளனங்களின் ஊடகப் பேச்சாளர் எம். எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

உர இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நெற்செய்கைக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வருமான இழப்பு, கடன் போன்றவற்றால் தத்தளிக்கின்றனர்.

எனவே, இன்னும் சில நாள்களில் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற பெரும்போக அறுவடை நெல்லை, அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பாக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X