Janu / 2025 ஜூலை 06 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரேஷ்ட ஊடகவியலாளர், மற்றும் நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ. எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்டாளைச்சேனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், கடந்த 02 ஆம் திகதி இரவு - தனது நண்பர்களுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் தலைமையில் அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டார்.
தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் - றியா மசூர் உள்ளிட்டவர்கள் மது போதையில் இருந்ததாக, இச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் மப்றூக் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆயினும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதேவேளை, அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
பாறுக் ஷிஹான்

47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026