2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

ஓட்டோ விபத்தில் சிக்கியிருந்தவர் மரணம்

Janu   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) அன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் புதன்கிழமை (22) அன்று மரணமடைந்துள்ளார்.

ஏறாவூர் - மீராகேணி ஆர்.டி.எஸ். வீதி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய மகுமூது லெப்பை அப்துல் ஹமீட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த குறித்த நபர் மயக்கமடைந்த நிலையில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X