Janu / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து 300 மில்லி லீட்டர் கசிப்பு போதை பொருளுடன் 31 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புகளின் போது நாகக்குடா,கல்லடி, கிராம்குளம், தாழங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட நிலையிலும், வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கசிப்பு போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) அன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
ரீ.எல்.ஜவ்பர்கான்

8 minute ago
17 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
48 minute ago
1 hours ago