Janu / 2026 மே 03 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த விஜயமானது 3 ODI போட்டிகள், 30 T20 சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்டதாக அமையும் என ஞாயிற்றுக்கிழமை (03) வெளியிடப்பட்ட ஊடக அறிவிக்கையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொடரானது ஒருநாள் போட்டிகளுடன் ஆரம்பமாகவுள்ளது. அனைத்து ஒருநாள் போட்டிகளும் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் 'சபினா பார்க்' (Sabina Park) மைதானத்தில் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் ஜூன் 11, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இருபதுக்கு 20 தொடர் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 18 முதல் 21 வரை அன்டிகுவாவிலுள்ள 'கூலிட்ஜ்' (Coolidge) கிரிக்கெட் மைதானத்தில் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
முக்கியமான டெஸ்ட் தொடரானது அன்டிகுவாவிலுள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில் நடைபெறும். முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 3 முதல் 7 வரையும் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான விஜயம் நிறைவுக்கு வரும்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .