2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கன ம​ழையால் மக்கள் பாதிப்பு

Mayu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பல குடும்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள  46 குடும்பங்களைச் சேர்ந்த 137 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



அதிகமான வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதோடு வயல் வெளிகளும் நீரில் மூழ்கியுள்ளன

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து 2 அடியில் வெள்ளநீர் செல்வதால் இவ் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகதால் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் வாகனங்களை பாதுகாப்பாக வழி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீஷான் அஹமட் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X