Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன், கனகராசா சரவணன்
காத்தான்குடியில் அஜ்வத் ஆசிரியரை வேனில் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வெள்ளை வேன், மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஏ.எம்.எஸ்.ஏ றகீம் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையில், ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆசிரியருக்கும் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த கடத்தலில் ஈடுபட்டவர்களான இரு சகோதர்களுக்கும் இடையே காணி விவகாரம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவருகிறது.
இந்நிலையிலேயே, ஆசிரியரை கடத்த திட்டமிட்டு மட்டக்களப்பில் நகரிலுள்ள வாகனம் வாடகைக்கு விடப்படும் கடை ஒன்றில் இருந்து வான் ஒன்றை வாடகைக்கு பெற்று, அதனைக் கொண்டு செவ்வாய்க்கிழமை (06) இரவு ஆசிரியர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறி, மெத்தைப்பள்ளி வீதியில் பிரயாணித்துபோது, எதிராக வானில் வந்த இருவரும் அவரை வழிமறித்து வானில் இழுத்து ஏற்றி கடத்திச் சென்றனர்.
இதன் பின்னர் கடத்தல்காரர்கள் தங்களது வீட்டுக்குக் கொண்டு சென்று, அவரைத் தாக்கி, அ ங்கு அடைத்து வைத்திருந்து, இரு தினங்களின் பின்னர், ஆரையம்பதி பகுதியிலுள்ள மாவிலங்குதுறை பகுதியில் விட்டிருந்தார்கள். அவரை பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரின் சகோதரர் கடத்திய அன்றே, டுபாய் நாட்டுக்கு தப்பியோடி விட்டதாகவும் அஜ்வத் ஆசிரியரின் அலைபேசியை மண்முனை வாவிக்குள் வீசியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026