Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீட்
கிழக்கு மாகாணத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளுர் மருந்துகளை வழங்குவதற்கும் நோயிலிருந்து விடுபட தேவையான மருந்துகளை ஊக்குவிப்பதற்கும் முடிவெடுப்பதற்கு, மாகாணத்தில் சிறப்பு விசேட ஆயுர்வேத பணிக் குழுவொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நிறுவியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை விரைவில் வழங்குவதற்கான திட்டத்தை இந்தக் குழுவினர் செயற்படுத்துவரென, ஆளுநர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளுர் மருத்துவம் மற்றும் ஹெலவேடகத்தை ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதில், இந்தப் பணிக் குழு நிபுணத்துவம் பெற்றது.
அந்தக் குழுவின் விவரம் வருமாறு:
1. வெங்கமுவே நாலக தேரோ. வனவாசல விகாரை, களனி
2. துசித பி.வானிகசிங்க, பிரதம பொதுச் செயலாளர், கிழக்கு மாகாணம்
3. ஏ.வி.எம். அன்சார், செயலாளர், சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாணம்
4. டொக்டர் ஸ்ரீதர், மாகாண ஆணையளர், ஆயுர்வேதத் துறை, கிழக்கு மாகாணம்
5. டொக்டர் ஷியாமளா வர்ணகுலேந்திரன், மாகாண ஆணையாளர் கோனேஷ்புரி ஆயுர்வேத வைத்தியசாலை, திருகோணமலை
6. டொக்டர் மதிவம் நிரஞ்சன், மருத்துவ கண்காணிப்பாளர், ஆயுர்வேத வைத்தியசாலை, திருகோணமலை
7. டொக்டர் ஜெ.பாஸ்கரன், மருத்துவ மேற்பார்வையாளர், சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு
8. டொக்டர் எம்.அலியார் நாபில், மருத்துவ ஆயுர்வேத வைத்தியசாலை, நிந்தவூர்
9. டி.எஸ்.எல்.திசாநாயக்க, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை, வெரன்னகெடகொட
10. திருமதி ஜேஎல்என்டி குமாரிஹாமி, ஆயுர்வேத மருந்தகம், பதியத்தலாவ
11, டொக்டர் எம். வெர்மேந்திரன்
12. டொக்டர் டி.எம்.ஏ. பிரியந்த வன்னியாராச்சி
13. டொக்டர் டப்ளியூ.எம்.எஸ்.சரத் கோட்டயவத்த. ஆயுர்வேத மருத்துவர்
14. சுலைமான் லெப்பை முகமது, இலங்கை தொழிற்பயிற்சி ஆணையம்
15. டொக்டர் தி. ஸ்ரீ சந்திரராஜா
16. டொக்டர் டப்ளியூ.எம்.நிலங்கா சுதர்சன, மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, தெஹியத்தகண்டி
17. சிந்தக விஜேவர்தன, ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கிழக்கு மாகாணம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago