Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்கக் தக்க குறித்த இளைஞர் அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணம் செய்த போதே இவ்வாறு விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026