Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன்
திருகோணமலை, சம்பூர், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணி, இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இருந்தபோதிலும் நேற்று முன்தினம் (22) மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து மேலதிக பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துரைக்கையில், “கார்த்திகை 26, எமது இன விடுதலைக்காய், இலட்சிய கனவுடன் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர விருட்சங்களை நினைவுகூர்ந்து, இதய அஞ்சலி செலுத்துவதற்காய் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
அன்றைய நாளில் மாவீரர்கள் துயிலும் இல்ல வளாகத்துக்குள், கட்சி பேதம் மறந்து, இதயசுத்தியுடன் தீபமேற்றி, அஞ்சலி செலுத்துவதோடு, மாவீரர்களின் பெற்றோருக்கு உரிய கௌரவத்தையும் வெளிக்காட்ட வேண்டும்” எனவும் தெரிவித்தனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
26 minute ago
40 minute ago