Janu / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை(13) அன்று திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டு வீடு பகுதியவில் சேதமடைந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அனோஜன் சென்று நிலைமையைப் பார்வையிட்டிருந்தனர்.
அந்த பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு வீடொன்று மின் கசிவினால் தீ பற்றி எரித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அப்பிரதேசத்தில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்றமை தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என இதன்போது பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வ.சக்தி


3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago