2026 மே 15, வெள்ளிக்கிழமை

திருகோணமலை கல்வி வலயத்தில் பாடசாலைக்குப் பூட்டு

J.A. George   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-கோட்ட பாடசாலைகளை  மறுஅறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை நகர்ப்பகுதியில்  கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தின் ஊடக செயலாளர் றுச்சிற டிலான் மதுசங்க அனைத்து ஊடகங்களுக்கும்  ஊடக அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .