2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

பலத்த காயங்களுடன் இளைஞன் மீட்பு

Janu   / 2024 ஜூன் 11 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞன் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இளைஞன் ஒருவர் மீட்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11) அனுமதிக்கப்பட்டுள்ளார் .

புத்தளம் பஸ் வண்டியில் வந்த குறித்த இளைஞனும் இன்னுமொரு இளைஞனும் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் பஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞன் மீது மற்றைய இளைஞன் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .