Ilango Bharathy / 2022 ஜனவரி 23 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வலயத்துக்குட்பட்ட, நிந்தவூர் கோட்டத்தின் கீழுள்ள அட்டப்பளத்திலுள்ள ஒரேயொரு தமிழ்ப்பாடசாலையான அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயம், மூடப்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய அளவு ஆசிரியர்கள் இன்மையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.136 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் காணப்படும் இப்பாடசாலையில் முக்கிய பாடங்களாகக் கருதப்படும் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இருபாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால், மாணவர்கள் குறித்த பாடங்களைக் கற்க முடியாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள ஒரேயொரு பாடசாலையையும் இழுத்துமூடப்படுவதற்கு இவ்விடமாற்றங்கள் செய்யப்படுகின்றனவா? என அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுநலஅமைப்புகள் இதுவிடயத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளன.
போதுமான அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிடின் திவீரபோராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago