2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பைஷல் பதில் செயலாளராக கடமையேற்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாண, வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷட்.ஏ.எம்.பைஷல் தனது கடமைகளை புதன்கிழமை (16) பொறுப்பேற்றுக் கொண்டார்.

வீதிஅபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தஎம்.எம்.நஸீர் கடந்த11 ஆம்திகதிஓய்வுபெற்றதையடுத்து, கிழக்கு மாகாணமுதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றி வருகின்ற இஷட்.ஏ.எம்.பைஷல்அப்பதவிக்கு மேலதிகமாக வீதிஅபிவிருத்தி அமைச்சின் பதில்செயலாளராக கடமையாற்றும் பொருட்டு கிழக்கு மாகாணஆளுநர்பேராசிரியர் ஜயந்தலால்ரட்ணசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணஅமைச்சின் செயலாளர்கள், மாகாணதிணைக்களத் தலைவர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர். 

அபு அலா, த.ஜெபி ஜனார்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X