Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ ஹுஸைன்
கூட்டுறவாகச் செயற்பட்டதால் பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றத்தை அவதானிக்க முடிவதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தெரிவித்தார்.
கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வருடாந்தக் கூட்டுறவு விழா, ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்பக மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (19) இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மூதூர், சேருநுவர, வெருகல், வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர் அபவிருத்தி அகம் தன்னார்வ அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி வரும் கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றியதோடு அவர்களது உற்பத்திப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அனஸ், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவை வளமுள்ள பிரதேசமாக மாற்றுவதில் இளைஞர் அபிவிருத்தி அகம் மிக முக்கிய தரப்பாகக் கைகொடுக்கின்றது. அவர்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை கூட்டுறவுச் சங்கங்களினூடாக நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்றார்.
இந்நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் என். சிவலிங்கம் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார், இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago