R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய 30 வயதுடைய நபரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது சந்தேகநபரை“ தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர் நோன்பு முடிப்பதற்காக சம்பவதினமான திங்கட்கிழமை(17)அதிகாலை சாப்பிடுவதற்காக குறித்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சாப்பிடுவதற்காக சென்ற இளைஞனின் கால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மேசைக்காலில் தட்டுப்பட்டதையடுத்து மேசையில் மேலிருந்த கப்பில் இருந்த தண்ணீர் கொட்டியுள்ளது.
இதனையடுத்து தெரியாமல் தட்டுப்பட்டுவிட்டது என பொலிஸாரிடம் மன்னிப்பு கோரிய நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரை தாக்கிய இளைஞன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததையடுத்து நீதவான், வைத்தியசாலைக்கு சென்று இளைஞனை பார்வையிட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கனகராசா சரவணன்
.
37 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago