R.Tharaniya / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை சனிக்கிழமை (15) அன்று கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் சம்பவ தினமான சனிக்கிழமை (15) அன்று இரவு ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் நகரிலுள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டனர்.
இதன் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த தனுஷன் என்பவரை 3200 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவருடன் இருந்த மற்றைய வியாபாரியான சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த விதுஷன் என்பவரை 1300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரியான சதீஸ்வரன் என்பவரை 2500 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago