Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை-கந்தளாய் காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபரை, திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (15) கைது செய்தனர்.
இம்மரங்கள் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகள் மூலம் கிண்ணியாவிற்கு கொண்டுசெல்லப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய நான்கு வண்டிகளையும், அரச தேக்கு தோட்டங்களில் இருந்து வெட்டப்பட்ட மரங்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரைத் தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago