Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஸ்லம்
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக் முன்னிலையில், கலாசார உத்தியோகத்தரும் மேற்படி மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான யூ.கே.எம் றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இம்முகாமைத்துவ சபையின் அங்குரார்ப்பண நிகழ்வின்போதே அஸ்வான் இப்பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்ற அஸ்வான் மௌலானா, நாடகக் கலை பட்டறைக்கான வளவாளராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026