Freelancer / 2021 நவம்பர் 22 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் ஒன்றினைப்பின் கிழக்கு மாகாண தலைவர் சிவயோகநாதன் சீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் யோகராசா தர்மிதன் ஆகியோருக்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவர்களுடன் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களால், விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக 1979ஆம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2, பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பி. கெட்டியாராச்சி நீதிமன்றில் சமர்பித்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக, கடந்த 19ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வரை நினைவேந்தலில் ஈடுபட தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026