Janu / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சந்தேக நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவரால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி செல்வாநகரில் உள்ள வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சந்தேக நபர் ஒருவர் வீட்டின் மதுலினால் ஏறி உள்ளே நுழைந்து திருடி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் தேடிய நிலையில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரே அவர் திருடிய சைக்கிளை வீதியினால் செலுத்தி வந்து கொண்டிருந்த போது பொலிஸாரைக் கண்டு மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு தப்பியோடி உள்ளார்.
குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அவரால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மற்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரை தேடி மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago