Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 22 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தலைமையிலான குழுவொன்று, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கான கள விஜயத்தை, நேற்று மேற்கொண்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் குழுவினரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தலைமையிலான வைத்தியசாலையின் பணிக் குழுவினர் வரவேற்றனர்.
இதன்போது, புதிதாக மறுசீரமைப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவு, சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகத்தால் திறந்து வைக்கப்பட்டதுடன், அப்பிரிவுக்கான ஒரு தொகுதி உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
வைத்தியசாலையின் வளாகத்தில் மரக்கன்றொன்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் நடப்பட்டது.
மேலும், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை குறித்தும் உடனடித் தேவைகள் குறித்தும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தலைமையிலான வைத்தியசாலையின் பணிக் குழுவினரால், சுகாதார அமைச்சின் குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், மகஜரும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
27 minute ago