Freelancer / 2021 நவம்பர் 21 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
கதரஸ்கொடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21)காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என, கதரஸ்கொடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நௌபர் ஹாஜியார் என்றழைக்கப்படும் எம்.எஸ்.எம்.கரீம் வயது (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தம்பலகாமம் நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில் வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் ஜனாசா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago