George / 2017 மே 29 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நமீதா காட்டிய கவர்ச்சி, ஒருகட்டத்தில் இரசிகர்களுக்கு சலிப்புத்தட்டவே அவருக்கான திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன.
சில ஆண்டுகளாக காணாமல் போன நமீதா, கடந்த ஆண்டு “இளமை ஊஞ்சல்”, “புலிமுருகன்” திரைப்படங்களில் நடித்தாலும், இரண்டிலுமே அவர் ஹீரோயின் இல்லை.
இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு “மியா” என்ற திகில் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மெத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
“மற்ற பேய் திரைப்படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது.
“கதாநாயகியாக வரும் நமீதா, தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவுக்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம் ஜூன் மாதத்தில் திரையிடவுள்ளோம்” என்கின்றனர் இயக்குநர்கள்.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025