2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசியப்பட்டியல் கிடைக்குமா?

Super User   / 2010 ஏப்ரல் 16 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  சார்பாக ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வழங்கப்படவுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்திற்கு கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமன பெயர்ப்பட்டியலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.   

இந்நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

 • Shukri Hasen Ali Saturday, 17 April 2010 04:12 AM

  ரிஷாத் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார் . மீதி இரண்டு ஆசனங்கள் வானத்தில் இருந்தா வந்தன..??

  Reply : 0       0

  Meelan Saturday, 17 April 2010 12:58 PM

  நகரத்தில் உலவும் கதைகளின்படி, அமீர் அலி (முன்னாள் அமைச்சர்) 50 வேனிலும், நஜீப் ஏ மஜீத் (முன்னாள் பிரதியமைச்சர் - கிண்ணியா) 9 வேனிலும் அலைவதாக தகவல்.
  எப்படியும் இரண்டு நாளில் தெரிந்து விடும்.

  Reply : 0       0

  Fayz - Qatar Saturday, 17 April 2010 03:20 PM

  சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார்.

  Reply : 0       0

  Muzammil Saturday, 17 April 2010 09:40 PM

  முஸ்லிம் சமுதாயத்தின் சீரழிவுக்கு காரணகர்த்தவாகிய இவர்கள் தங்களை முஸ்லிம் சமுதாயத்தின் செயல் வீரர்கள் என காட்டிகொள்கிறார்கள். இவர்கள் மறுமை நாளை மறந்தா வாழ்கிறார்கள்?

  Reply : 0       0

  Rizard Sunday, 18 April 2010 01:32 AM

  ரிசாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் மற்ற இரண்டு ஆசனங்கள் என்ன கனவிலா .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .