2026 மார்ச் 26, வியாழக்கிழமை

அடகுக் கடையில் மோசடி: முகாமையாளருக்கு சிறை

Freelancer   / 2024 ஜூன் 28 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் அடகுக் கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டில் அந்த அடகு நிலையத்தில் மேலாளராக கடமையாற்றிய நபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

ஹட்டன் மல்லியப்பு நகரில் உள்ள தனியார் அடகுக் கடை ஒன்றில் பணிபுரிந்த முகாமையாளர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் எம்.பரூக்தீனின் முன்னிலையில் புதன்கிழமை (26) ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  .

சந்தேகநபர் மேற்படி அடமான நிலையத்தில் முகாமையாளராக பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார் என்பதும், குறித்த அடமான நிலையத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து மூன்று மாதங்களின் பின்னர் நாடு திரும்பி, நகைகள், பண விபரங்களை தேடிப்பார்த்த போதே, மோசடி அம்பலமானது. 

 அதன்பின்னர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த அடகு நிலையத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .