Freelancer / 2024 மே 31 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப்பொதியை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடையை சேர்ந்த 26 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி திருடப்பட்ட பயணப்பொதியில் இருந்த மடிக்கணினி, கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை சந்தேகநபர் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், பையில் இருந்த 20,000 அமெரிக்க டொலர் பணத்தையும் சந்தேகநபர் திருடியுள்ளார்.
சந்தேகநபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொருட்களை கொள்வனவு செய்துள்ள நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். R
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago