2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இத்தாலியில் இலங்கையர் இருவர் கொலை

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் இரண்டு இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலுள்ள உணவக விடுதியொன்றில் மற்றுமொரு இலங்கையர் இவர்களை குத்திக் கொலை செய்ததாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட பிரச்சினையே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணம் எனவும் அந்த வட்டாரத் தகவல்கள்  குறிப்பிடுகின்றன.

கைதுசெய்யப்பட்டிருக்கும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களின் சடலங்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக இலங்கைக்கு கொண்டுவரவிருப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள்  குறிப்பிடுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .