2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இன்று நள்ளிரவு தேர்தல் முடிவுகளை அறிவிக்க தேர்தல் திணைக்களம் ஏற்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி பகுதிகளில் இடம்பெறுகின்ற மீள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான  முடிவுகள் இன்று  நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 6.30 மணிக்கு வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கண்டி மாவட்ட செயலாளர் கோத்தபாய ஜயரட்ன டெயிலிமிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம், அவர் கோரிக்கை விடுத்தார்.

குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை, தேர்தல்கள் நீதியாகவும், நியாயமானதாகவும் இடம்பெறும் என்று தாம் நம்புவதாகவும் கோத்தபாய ஜயரட்ன தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .