2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

Freelancer   / 2024 ஜூன் 17 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் சிலாபம் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்  தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாக சந்தேகிக்கப்படும்  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .