2021 ஜூன் 21, திங்கட்கிழமை

உயிருடன் இருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட 'மரண வாக்காளர் அட்டை'

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் வாழும் வாக்காளர் ஒருவருக்கு    'வாக்காளர் மரணம்' என எழுதப்பட்டவாறு வாக்காளர் அட்டை கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உயிருடன் இருக்கும் குறித்த வாக்காளர், இன்னமும் தான் உயிருடன் இருப்பதாகவும்,  மரணமடையவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதனால் கோபமடைந்த உயிருடன் இருக்கும் குறித்த வாக்காளர் குருநாகல் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் மரணமடைந்துள்ளது என்பது தொடர்பில் உறுதிப்படுத்துமாறு தேர்தல் அலுவலகம் எவ்வாறு தெரிவிக்க முடியும் எனவும் குறித்த வாக்காளர் விளக்கம் கோரியிருந்தார்.

பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த பி.எம்.வீரவிக்கிரம என்பவரே உயிருடன் இருக்கும் குறித்த வாக்காளர் ஆவார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .