Freelancer / 2024 ஜூலை 05 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.
இதன்போது, பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வழங்கிய தேரர், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க நான் தான் பரிந்துரைத்தேன் என்றும் நினைவுகூர்ந்தார். R
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026