Simrith / 2024 மார்ச் 10 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் பேச்சாளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“இன்று @officialunp சந்திப்பிலிருந்து நான் பணிவுடன் என்னை விலக்கிக்கொண்டேன், ஏனெனில் எனக்கு ஒரு பேச்சு வாக்குறுதி அளிக்கப்பட்டது, பின்னர் எனது பெயர் வெட்டப்பட்டதை அறிந்தேன். @RW_UNP சார்பாக இந்த முடிவுகளை எடுப்பது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் கட்சிக்கு ஆதரவாக நிற்பேன், ஆனால் ஒருவரின் கௌரவம் பாதிக்கப்படக்கூடாது” என நவீன் திஸாநாயக்க தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட பேரணியில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026