Freelancer / 2024 ஜூன் 08 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருள்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இல்லையெனில் எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியாத உற்பத்திகளை கைவிடுவதே சிறந்ததெனவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முன்னோடித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. (a)

55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago