2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

“ ஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் தாவுவர்”

Editorial   / 2024 ஜூலை 08 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு  எம்.பி.க்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் இன்று (08)  தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்துக்குச் செல்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

"இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டொலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா கூறினார்.

"நாம் ஒரு சில எம்.பி.க்களை மட்டுமே இழக்கப் போகிறோம், ஆனால் பலர் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .