Mayu / 2024 ஜூலை 02 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக செவ்வாய்க்கிழமை (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை (02) காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்படவில்லை.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago